×

தீவிரவாத வழக்கில் இம்ரானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன் இழந்த இம்ரான் கான், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசையும், அரசு நிர்வாகங்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சமீபத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெண் நீதிபதி ஒருவரையும், மூத்த போலீஸ் அதிகாரிகளையும் மிரட்டும் தொனியில் பேசினார். இது தொடர்பாக அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில், அவருக்கு ஜாமீன் கோரி தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, இம்ரானுக்கு செப்டம்பர் 1ம் தேதி வரையில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்….

The post தீவிரவாத வழக்கில் இம்ரானுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Imran ,Islamabad ,Imran Khan ,Pakistan ,Shebass Sharif ,
× RELATED கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு